மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த பாராளுமன்ற விவாரதங்களின் போது நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h.
இது பொது நிதி தொடர்பானதும் நாடும் பாராளுமன்றத்தினதும் பொறுப்புடைய விடயம் என்பதனால் மக்களும் பாராளுளுமன்றமும் இந்த விடயத்தில் கொண்டுள்ள அக்கறையினை எந்த விதத்திலும் திசைதிருப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்
அத்துடன், பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை மட்டுமல்லாது, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் இரா சம்டபபந்தன் வலியுறுத்தியுள்ளார்
மேலும் விவாதங்களை தவிர்ப்பதாக மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படக் கூடாது எனவும் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றம் என்ன சொல்ல வேண்டும் என்பதை, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்