Home இந்தியா போகி பண்டிகையினால் காற்று மாசடைகிறது – கண்காணிக்க சென்னையில் 15 இடங்களில் ஆய்வு…

போகி பண்டிகையினால் காற்று மாசடைகிறது – கண்காணிக்க சென்னையில் 15 இடங்களில் ஆய்வு…

by admin

போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை கண்காணிக்க சென்னையில் 15 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது எனவும் இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

இதுதவிர வாகன சாரதிகளுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More