இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.
கடந்த ஓகஸ்டு மாதம் 31-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைக்கோளின் மேல் அமைக்கப்பட்டு இருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைக்கோள் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இதற்காக 28 மணி நேர கவுண்ட்-டவுன் கடந்த வியாழக்கிழமை காலை 5:29 மணிக்கு ஆரம்பமாகியது. கவுண்ட் டவுன் முடிந்து சரியாக இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இன்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் ஆகும்.
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 31 செயற்கைக்கோள்களில், கார்ட்டோ சாட்-2 வரிசை செயற்கைக்கோள் மற்றும் ஒரு மைக்ரோ செயற்கைக்கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகிய மூன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 28 செயற்கைகோள்கள் கனடா, பின்லாந்து, பிரான்ஸ், தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்ததாகும். மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கார்ட்டோசாட் செயற்கைக்கோள் மட்டும் 710 கிலோ எடைகொண்டது. கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.
இஸ்ரோ தனது 100-வது செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது…
Jan 11, 2018 @ 05:13
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது 100-வது செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ, கடந்த ஓகஸ்ட் மாதம் விண்ணில் ஏவிய செயற்கைகோள் வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் தோல்வியை தழுவியது.
இதையடுத்து தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் கார்ட்டோ சாட் உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து நாளை இஸ்ரோவின் 100-வது செயற்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளானது நாளை இந்திய நேரப்படி 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
விண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைகோள்களில், 28 செயற்கைகோள்கள் வெளிநாட்டை சேர்ந்ததாகும். மற்ற மூன்று செயற்கைகோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ரொக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.