தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8 வீதமானோர் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது தேசிய சராசரியைவிட அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை – உயரத்தை சரியாக கணக்கிடுவதில்லை எனவும் அதற்கான வசதி அவர்களிடம் இல்லாமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊட்டச்சத்துக் குறைபாடானது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது எனவும் தமிழகத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.