ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. ஈரான் – ஈராக் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 7.3 ரிக்ரர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 620 பேர் உயிரிழந்திருந்தனர்; என்பது குறிப்பிடத்தகக்து.