இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் 17 வயது மகன் காலிப் குரு 12-ம் வகுப்பு தேர்வில் 441 மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். 2001-ம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பாடசாலை கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், அப்சல் குருவின் 17 வயது மகன் காலிப் குரு, மொத்தமுள்ள 500 மதிப்பெண்ணுக்கு 441 மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் நகரில் அப்சல் குருவின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது