206
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் ஆண்கள் பிரிவில் ரபேல் நடாலும் பெண்கள் பிரிவில் சிமோனா ஹலெப்பும்; முதல் இடத்தை பிடித்துள்ளனர். அதேவேளை பெடரர் 2-வது இடத்தினைப் பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டுக்கான முதலாவது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடத் எதிர்வரும் 15ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான தரவரிசையின் அடிப்படையியே இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் விலகியதால் சிமோனா ஹலெப் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love