அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் ஆந்திராவைச் சேர்ந்த 29 வயதான ரகுநந்தன் ஜந்தமுரி எனும் இளைஞருக்கு எதிர்வரும் பெப்ரவரி 23ம் திகதி மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது 10 மாத குழந்தை மற்றும் அவரின் பாட்டியை கொலை செய்தமை தொடர்பிலேயே குறித்த இளைஞருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்காவில் பொறியியலாளராக கடமையாற்ற வந்த குறித்த இளைஞர் கடந்த 2012-ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில் 10 மாத குழந்தையை கடத்த முற்பட்ட போது குழந்தையின் பாட்டி தடுத்த போது இருவரையும் கொலை செய்திருந்தார். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ரகுநந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் நிராகரிகப்பட்டது.
இந்நிலையில், ரகுநந்தனுக்கு மரணதனடனை நிறைவெற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற பெப்ரவரி 23-ம் திகதி விச ஊசி போட்டு அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
பெனிசில்வேனியாவில் மரண தண்டனைக்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் படி அவர் மரணதண்டனையில் இருந்து அவர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பெனிசில்வேனியாவில் ஒருவருக்கு கூட மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.