வட்ஸ் அப் குழுவினுள் உள்நுழைந்து அதில் இருக்கும் தகவல்களை எடுக்க முடியும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலருக்கு நடந்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் குழுவில் அட்மின் நினைத்தால் மட்டுமே ஒரு நபரை குழுவில் சேர்க்க முடியும். ஆனால் சில இணைய திருட்டு முறைகளை பயன்படுத்தி எளிதாக நாம் நினைக்கும் நபர்களை வட்ஸ் அப் குழுவில் சேர்க்க முடியும்.
இது குழுவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளலாம். சில முக்கிய வட்ஸ் அப் குழுக்களில் விவாதிக்கப்படும் விடயங்களை திருடுவதற்காகவே இந்த செயற்பாடுகள் தொடவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வட்ஸ் அப்பில் சில தகவல்கள் பரவாமல் இருக்கவும் இந்த இணைய திருட்டு குழுக்கள் இவ்வாறு செயற்படுவதாகவும், மிகவும் எளிதாக இதை செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வட்ஸ் அப்பில் இருக்கும் மோசமான பாதுகாப்பு காரணமாக இப்படி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாருடைய தொலைபேசி எண்ணையும் இதன் மூலம் திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வட்ஸ் அப் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதே சமயம் இந்த விஷயத்தை மிகவும் முக்கியமானதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து முறையாக ஆராய்ந்து தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது