170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பகுதியிலிருந்து யாழிற்கு மரக்கறி ஏற்றி சென்ற பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் காணப்பட்ட நீர் வடிகால் கட்டமைப்பில் குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தன் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டதுடன் பாரவூர்தி பாரிய சேதமடைந்துள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love