காஷ்மீரில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். மேலும் 2016-ம் ஆண்டு ஏற்பட்ட பதற்றமான சூழலின்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4,327 இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற உத்தர விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.
காஷ்மீரில் அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது எனவும் சமரசம், மறுவாழ்வுப் பணிகள்தான் முன்னேற்றத்துக்கான ஒரே வழி எனவும் தெரிவித்துள்ள அவர் அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைக்காவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும் எனவும் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.