குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மெக்ஸிக்கோவின் சில நகரங்களுக்கு பயணம் செய்வது குறித்து அமெரிக்கா எச்சரிககை விடுத்துள்ளது. மெக்ஸிக்கோவின் ஐந்து மாநிலங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குழு மோதல்களினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவின் கொலிமா(Colima, ), குரேரெரோ (Guerrero ) , மிக்கோகான(Michoacán) , சினாலோவா ( Sinaloa) மற்றும் ரமுலிபஸ் ( Tamaulipas ) மாநிலங்களில் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு நிகரான ஆபத்துக்கள் இந்த மாநிலங்களில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் அதிகளவான கொலைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.