231
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”
யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.
அதேவேளை புத்தாண்டு வாழ்த்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இரு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love