குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளார். ஈரானிய அணுத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரானிய அணுத் திட்டங்கள் குறித்த அமெரிக்காவின் வரையறைகளில் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
2015ம் ஆண்டில் ஈரானிய அணுத் திட்டங்கள் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த உடன்படிக்கை தொடர்பில் ஈரான் சரியான கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய அணுத் திட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு செய்யக் கூடிய வகையிலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.