144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
60 லட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெதபடமைன் என்னும் ஆபத்தான போதைப் பொருட்களையே விமான நிலைய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேலும் போதைப் பொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த இந்திய பிரஜை ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் குறித்த நபர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
Spread the love