172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையர்கள் சிலர் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டில் இவ்வாறு இலங்கையர்கள் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளதாக ஜப்பானிய ஊடகமொன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் ஜப்பானிய வீசா நடைமுறைகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாதுகாப்பை விடவும் தொழில் வாய்ப்புக்களை முதனிலையாகக் கொண்டே புகலிடம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளது. உரிய காரணங்கள் இன்றி புகலிடம் கோரும் நபர்களை நாடு கடத்தக்கூடிய வகையில் சட்டங்கள் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Spread the love