147
இலங்கையுடன் மிகச் சிறந்த ராஜதந்திர உறவுகள் காணப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வர்த்தக விவகார அமைச்சர் மொஹமட் பெர்வயிஸ் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான வர்த்தக உறவுகளும் மிகச் சிறந்த முறையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் நட்பான சூழ்நிலை இலங்கையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் வர்த்தக கண்காட்சியொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love