159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டியுனிசியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலை மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டக்காரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் சுமார் 800 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலவந்தமான அடிப்படையில் கைது செய்யப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு, டியுனிசிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
Spread the love