139
மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் விமான நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
Spread the love