குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவும் தென்கொரியாவும் இணைந்து ஓர் அணியாக எதிர்வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஹொக்கி விளையாடத் திட்டப்பட்டுள்ளது. தென்கொரியாவின் சியோலில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தமது நாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக வடகொரியா இணங்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான மகளிர் ஐஸ் ஹொக்கி அணிக்கு இரு நாடுகளினதும் வீராங்கனைகளையும் இணைந்து ஓர் அணியாக விளையாடுவது குறித்து தென்கொரியா யோசனை முன்வைத்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்விலும் இரு நாடுகளினதும் அணிகள் ஒன்றாக அணிவகுத்து செல்வது தொடர்பிலான யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது. எனினும் ஒரே அணியாக போட்டியில் பங்கேற்பது குறித்த யோசனைக்கு வடகொரியா இதுவரையில் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.