குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் ஒர் கடுமையான இனவாதி என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்கா, ஹெய்ட்டி மற்றும் எல் சல்வடோர் பிரஜைகளை ஜனாதிபதி ட்ராம்ப் மிகவும் அநாகரீகமான வார்த்தையினால் திட்டியுள்ளதனை அடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்து தெளிவான இனவாதத்தை வெளிக்காட்டுவதாக 55 நாடுகள் உறுப்புரிமை கொண்டுள்ள ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளும் ராஜதந்திரிகளும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மிகவும் இனவாத அடிப்படையில் ஆங்கிலத்தில் Shithole என்னும் வார்த்தையை ட்ராம்ப் குடிவரவு குடியகழ்வு சம்பந்தமான கூட்டமொன்றில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.