173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல்களில் களமிறங்க உள்ளதாக ஆதிவாசிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆதிவாசிகளின் சார்பில் யுவதியொருவர் போட்டியிடுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் ஆதிவாசிகள் போட்டியிடுவர் என ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னிலாத்தோ தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தங்களது பிரதிநிதிகளை ஆட்சி நிர்வாகங்களில் பங்கெடுக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love