உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் செலமேஸ்வர் உட்பட 4 சிரேஸ்ட நீதிபதிகளிடையே சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ள 7 பேர் கொண்ட குழு ஒன்றினை இந்திய பார் கவுன்சில் நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என சிரேஸ்ட நீதிபதிகள் செலமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததனை அடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் அவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தனனர். இதன்பின் அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
தலைமை நீதிபதிக்கு எதிராக சிரேஸ்ட நீதிபதிகள் பகிரங்கமாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது துரதிஷ்டவசமான எனவும் . இதனை தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் இதுபோன்ற விவகாரங்களை பொது அரங்கில் விவாதித்தால் நீதித்துறை, ஜனநாயகம் பலவீனமடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆத்துடன் இந்த முரண்பாட்டு நிலைமையை தீர்க்க பார் கவுன்சில் சார்பில் 7 பேர் குழுவை நியமித்துள்ளதாகவும் இந்த குழுவினர் திங்கள்கிழமை முதல் இருதரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற விவகாரத்தில் தலையிட மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் எனத் தெரிவித்த அவர் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம் டினவும் தெரிவித்துள்ளார்.