தென்னாப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்னும் இனந்தெரியாத ஒரு நோய் தாக்கியதில் 60 உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 750 பேருக்கு இந்த நோய்த் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து உள்ளது. இந்த நோய்க்கு காரணமான பக்டீரியா, மண், நீர், பாற்பொருட்கள், கடல் உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற வற்றில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிறு குழந்தைகள்தான் இந்த நோய்க்கு இலக்காக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் கடுமையான நோய் என்றபோதிலும் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடியதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேவேளை இந்த நோய் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதுடன் சுகாதாரத்துறையில் உட்பட ஏனைய துறைகளையும் பாதித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.