ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது முறைப்பாடு தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (பிசிசிஐ) கடிதம் எழுதியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்; முகமது அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற ஹைதராபாத் கிரிக்கெட் சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்து சென்ற அஸாருதீனை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூட்ட அரங்குக்குள் செல்ல சுமார் ஒரு மணி நேரம் காக்க வைத்த அனுமதித்தமை தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் தன் மீது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறும் புகார்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் ன் மீது எந்தக் குற்றமும் இல்லை எனவும் தெரிவித்த அவர் தான் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள போதும் கூட்டத்துக்கு செல்ல முயன்றபோது, தனது பெயர் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
தான் ஒரு ஒரு சர்வதேச வீரர் பிசிசிஐ அங்கீகரித்துள்ளதுடன் தனக்குப் பாராட்டு விழாவை 2005-ல் பிசிசிஐ நடத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தன் மீது எந்தத் தடையும் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க தனக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.