"To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” – Prime Minister Theresa May pic.twitter.com/fWnUus4Wip
— UK Prime Minister (@10DowningStreet) January 14, 2018
பிரித்தானியா மட்டுமல்லாது உலகலாவிய தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கை, இந்தியா, குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் மட்டுமல்லாது அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தம் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.