இலங்கை அரசானது சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 97.365 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது முதலீட்டின் இரண்டாவது கட்டமாக பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சீனா மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பெனி லிமிட்டெட் ஆகியவற்றிற்கு இடையில் கடந்த டிசம்பர் 09 ம் திகதி கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையின் படியே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்துவதாக ன் குறித்த சீன நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்து.
இதன் முதற்கட்ட பணமாக இலங்கை அரசாங்கத்திற்கு 292.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடந்த 2017 டிசம்பரில் கிடைக்கப் பெற்றதுடன் மீதித்தொகை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் இரண்டு தவணைகளில் செலுத்தப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.அதன்படியே இன்று இந்த நிதி வழங்கப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.