175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு ரபால் நடால் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில் டொமினிக்கன் குடியரசின் எஸ்ட்ரல்லா பொர்கோஸை 6-1 6-1 6-1 என்ற செற் கணக்கில் வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார்.
நடால் கடந்த நவம்பர்மாதம் முதல் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் நடால் முழங்கால் உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சிறந்த ஆரம்பத்தை தந்துள்ளதாக நடால் தெரிவித்துள்ளார்.
Spread the love