மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டி விளையாட்டு தொடங்கியது.
வெற்றிபெற்றது அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை
இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டாம் சுற்றில் வெற்றிப்பெற்ற ஐந்து வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியில் பங்கேற்பதற்காக தான் அழைத்து வந்த காளை முட்டியதில் காயமடைந்த அதன் உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளைக்கு நான்கு தங்க காசுகளும், பத்தாயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம். பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு முடிந்ததை அடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல்வரும் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டினை தொடங்கி வைத்தனர். விளையாட்டினை காண உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும், பல மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் வந்துள்ளன. இந்தப் போட்டியில் 1000 காளைகளும், 1241 மாடுபிடி வீரர்களும் பங்கு பெறுகிறார்கள்
வெற்றி பெறும் வீரர்களும், காளைகளுக்கு கார் உட்பட பல லட்சங்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.
களத்தில் இறங்கிய முதல் காளை
களத்தில் காளைகளும் காளையர்களும்
பிபிசி