Home இலங்கை மைத்திரிக்கு கர்ம வினை பலனளித்துள்ளது – மஹிந்த..

மைத்திரிக்கு கர்ம வினை பலனளித்துள்ளது – மஹிந்த..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கர்ம வினை பலனளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதவிக் காலம் குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் இதனையே உணர்த்தி நிற்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
தனது பதவிக் காலம் பூர்த்தியாக இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தாம் ஜனாதிபதி தேர்தலை நடத்தி தவறொன்றை இழைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனை தாம் ஓர் தியாகமாகவே கருதவதாகத் தெரிவித்துள்ளார். தம்மை சர்வாதிகாரி என பலர் கூறியதாகவும் உண்மையில் தற்போது யார் சர்வாதிகாரி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு நடந்தது போன்றே மைத்திரிக்கும் பதவிக் காலத்தை இழக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More