181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினது பிரதியொன்று லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love