சி.பி.ஐ.யும், அமுலாக்கத்துறையும் நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையை அசட்டையீனமாக நடத்தி வருவதாக சுப்ரீம உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ.யும், அமுலாக்கத்துறையும் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையை குழப்ப முயன்றதாக அப்போதைய சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மீதான குற்றச்சாட்டையும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றல நேற்று விசாரணைக்கு வந்தபோதே நீதிபதிகள் மேற்கண்டவாறு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனினும் அதற்கு பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்த உச்சநீதிமன்றினால் நியமிக்கப்பட்ட சிறப்பு சட்டத்தரணி ஆர்.எஸ்.சீமா , ரஞ்சித் சின்காவுக்கு எதிரான விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும் விசாரணையை முடிக்க 6 மாதங்கள் ஆகும் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து வழக்கு விசாரணை மார்ச் 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது