176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமக்கு எதிராக சேறு பூசப்படுவதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கட்சிக்கும் தமக்கும் எதிராக சேறு பூசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அடக்குமுறைகளை பின்பற்றவில்லை எனவும் தேவை ஏற்பட்டால் அடக்குமுறைகளை பிரயோகிக்கவும் தயங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களனியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி பிரச்சினையை முன்னிலைப்படுத்தி சேறு பூசப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love