157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெண்கள் மதுபான விற்பனையில் ஈடுபடுவதில் தவறில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாக்குதல் விமானங்களை பெண்கள் செலுத்துகின்றார்கள் எனவும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் 2000 கோயில்கள் மூடப்பட்டதுடன், 2000 மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love