187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சொயிப் மலிக் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹமில்டனில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியின் போது இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார். ஓட்டம் ஒன்றை எடுக்க முற்பட்ட போது பந்து தலையில் பட்டதினால் இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.
உபாதையின் துடுப்பெடுத்தாடிய மலிக், பின்னர் களத்தடுப்பின் போது மைதானத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
Spread the love