161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 26 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
பிணைமுறி அறிக்கையுடன், 34 பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிணை முறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love