குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களுடன், ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதன் ஒன்றியத்தின் உறுப்பினர், சட்டத்தரணி கல்யானந்த திராணகம, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பிணை முறி விநியோகத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.