இந்தியா – ஜப்பான் கடலோரக் காவல் படையினர் வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான பயிற்சி யில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா – ஜப்பான் கடலோரக் காவல் படையினரிடையே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுப் பயிற்சி நடைபெறுவது வழமை. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான எட்டாவது கூட்டுப் பயிற்சி சென்னையில் மெரினா அருகேயுள்ள கடற்பகுதியில் இன்று நடைபெற்றது.
தேசிய அளவில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ஜப்பான் கடலோரக் காவல் படையின் கப்பல்களும் இந்திய கடலோரக் காவல் படையை சேர்ந்த கப்பல்களும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா-ஜப்பானை தவிர உலகின் 16 நாடுகளை சேர்ந்த கடலோரக் காவல் படை உயரதிகாரிகள் குழுவினர் இந்த போர் பயிற்சியை பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது