பங்களாதேசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. பங்களாதேசில் இடம்பெற்று வரும் இந்த முத்தரப்பு போட்டியில் பங்களாதேஸ், இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இற்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை – சிம்பாப்வே அணிகள் போட்டியிட்டன. நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 291 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் சிம்பாப்வே அணி 12 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டிள்ளமை குறிப்பிடத்தக்கது.