பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு…
பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, பிரபல நடிகை சமனலி பொன்சேகா உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றில் பத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வது தொடர்பில் நீண்ட காலமாக நாட்டில் காணப்பட்ட தடை அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தடை நீக்கம் தொடர்பில் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய எதிர்ப்புக்களைத் தொடர்ந்து இந்ததடை நீக்கம் மீளவும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தடை நீக்கம் வாபஸ் பெற்றுக் கொண்டமையை எதிர்த்து மீளவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்வதனை தடை செய்யும் அதிகாரம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு கிடையாது என தெரிவித்துள்ளனர். நிதி அமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மைத்திரியின் உத்தரவால், அடிப்படை உரிமை மீறப்படுகிறது – 7 பெண்கள் வழக்கு தாக்கல்…
இலங்கையில் பெண்கள் மது விற்பனை நிலையங்களில் பணியாற்றவோ, மது வாங்கவோ விதிக்கப்பட்ட தடையை சுமார் நாற்பது ஆண்டுகளின் பின் நிதியமைச்சு விலக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தது. எனினும், நேற்று (16) நிதியமைச்சின் அறிவித்தலை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அறிவித்தார்.
இதையடுத்து, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதியின் இந்தத் தடையை எதிர்த்து 21 வயதுக்கு மேற்பட்ட 7 பெண்கள் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.