குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றில் எப்போது விவாதம் நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் 22ம் திகதி தீர்மானிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 22ம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் விவாதம் குறித்த திகதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்பன பாரர்ளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடி குறித்த அறிக்கையின் 26 பிரதிகளும், பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி விசாரணைகள் குழுவின் அறிக்கையின் 34 பிரதிகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் பிரதிகள் மட்டுமே இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்