Home இலங்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஐ.நா மனித உரிமை பேரவையில் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

by admin

தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவி வருவதன் காரணமாக இலங்கை பாரிய அபிவிருத்திகளை அடைந்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதவிநிலை பிரதானி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா (General Qamar Javed Bajwa) தெரிவித்தார்.  இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை பிரதானி நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய உலக நாடுகள் பாகிஸ்தானிடமிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட வரலாற்றுரீதியான விஜயத்தினை நினைவுகூர்ந்த ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா இலங்கை பாகிஸ்தானின் நட்பு நாடாகும் என்றும் குறிப்பிட்டார்.  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் நீண்டகால தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி கடந்த யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பல உதவிகளை நல்கியமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.  பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய பாகிஸ்தானின் பதவிநிலை பிரதானி, பாகிஸ்தானில் அமைதியை உறுதிசெய்வதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெகுவிரைவில் அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் தொழிற் தகைமைகளை பெரிதும் பாராட்டிய பாகிஸ்தானின் இராணுவ பதவிநிலை பிரதானி  இலங்கையின் பாதுகாப்புத்துறை மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தனது நாடு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மிகவும் சிநேகபூர்வமான முறையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹிட் அஹ்மட் ஹஷ்மட் ஆகியோர் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More