ஏமனில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுப் போர் காரணமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு நாளும் 5 குழந்தைகள் இறப்பதாகவும் ஐ. நா.வின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ஏமனில் உள் நாட்டுப் போர் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.