கிழக்கு மாகாணத்தில் உள்ள புதிதாக பாடசாலைகளில் மாணவர்களை இணைந்து கொள்ளும் போது தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் ஒன்றுக்கு சுமார் 3000க்கும் மேல் குறைவடைந்து செல்வதாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந. புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களின் கல்வி அடைவு மட்டமும் குறைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் அம்பாறை – திருக்கோவில் விநாயகபுரம் கனிஸ்ட வித்தியாலயத்துக்கான புதிய வகுப்பறைக் கட்டடத்தை, திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தான் எதிர்பார்ப்பது மாணவர்களின் கல்வியின் அடைவு மட்டம் உயர்வடைய வேண்டும் என்பதே எனத் தெரிவித்த அவர் இதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் போரினால் மிகவும் பாதிக்க்பபட்டுள்ள தமிழ் மக்களாகிய நாம் இழந்தவற்றை கல்வியின் மூலமாகவே ஈடுசெய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.