சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை செய்யப்பட்ட தினம் அவரது அலுவலகத்தினை ராணுவ புலனாய்வாளர்கள் கண்காணித்ததாக நீதிமன்றில் இன்றையதினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை திரிப்போலி ராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வாளர்களே இவ்வாறு கண்காணித்ததாக புலனாய்வுக்காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தாம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை லசந்தவை தான்தான் கொலை செய்ததாக கடிதம் எழுதிவைத்துத் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி ஜயமான்ன, சம்பவம் இடம்பெற்ற தினம் கொழும்பில் இருக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுக் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் மாhச் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது