குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் முழுமையாக நீக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா மீது ஈரான் பிரயோகித்து வரும் அழுத்தங்களை குறைக்கவும் அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரியாவில் சுமார் 2000 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
2011ம் ஆண்டில் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டதன் ஊடாக செய்த தவறை சிரிய விவகாரத்தில் செய்யத் தயாரில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் தெரிவித்துள்ளார். குர்திஸ்தான் தலைமையிலான எல்லைப் படையினருக்கு பயிற்சி வழங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்