குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி பிரதமர் பாராளுமன்றில் உரையாற்றிய போது மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மோசடிகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமரின் இந்த பாராளுமன்ற உரையானது பொய்யானது எனவும் இந்த ஒரேயொரு காரணத்தை வைத்துக்கொண்டே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையானது 1257 பக்கங்களைக் கொண்டது எனவும், எனினும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது 1154 பக்கங்களைக் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த அறிக்கையின் 103 பக்கங்களைக் காணவில்லை என உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்