குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வேயில் விரைவில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நான்கு ஐந்து மாதங்களில் சிம்பாப்வேயில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி எமர்சன் மனங்காவா ( Emmerson Mnangagwa) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அழைத்து தேர்தலை கண்காணிக்குமாறு கோர உள்ளதாகவும் ஜனாதிபதி எமர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். சிம்பாப்வேயில் சுதந்திரத்தின் பின்னர் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் தலையீடு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.