குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை விருத்தி செய்து கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையையும் அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
இப்பொழுது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து, அரச பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்.