இந்தியர்களை வதைக்கும் மதவாதமும், இனவாதமும் :
பெங்களூரில் தமிழ் கவுன்சிலருக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் – தமிழ் சுவரொட்டிகள் கிழிப்பு
தமிழ் கவுன்சிலர் ஏழுமலை என்பவருக்கு எதிராக பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ் சுவரொட்டிகள் மற்றும் தமிழக கட்சிக் கொடிகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.
பெங்களூர் நகரின் புலிகேசிநகர் தொகுதிக்குட்பட்ட சகாயபுரம் பகுதி கவுன்சிலராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழரான ஏழுமலை என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த மாநகர தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், ஏழுமலை, புலிகேசிநகர் பகுதியை தமிழ்மயமாக்குவதாக தெரிவித்துள்ள கர்நாடக ரக்ஷனா வேதிகே என்ற அமைப்பினர் தமிழர்கள் அதிகம் வாழும் அந்த பகுதியில், தமிழில் சுவரொட்டிகள் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டமைக்கு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீதிகளில் சென்ற வாகனங்களில் ஒட்டியிருந்த விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் ஸ்டிக்கர்களைம் கிழித்து எற்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொங்கல் வாழ்த்து கூறி பிரதேச பிரமுகர்கள் தமிழில் வைத்த பதாதைகள் மற்றும் கட்அவுட்டுகளையும் கிழித்து எறிந்துள்ளதாகவும் இந்த சம்பவங்களால் டேனரி ரோடு பகுதியில் பரபரப்பான ஒரு சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.